close
Choose your channels
LoveToday
CWK

சினிமாவில் அறிமுகமாகும் பிக்பாஸ் தாமரை.. இந்த இருவரில் யார் ஹீரோ?

Sunday, October 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தாமரை தற்போது சினிமாவில் நடித்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரைக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் அவர் கள்ளங்கபடம் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் விளையாடியது அனைவருக்கும் பிடித்தது என்பது தெரிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் சிறப்பாக விளையாடினார். அதுமட்டுமின்றி தனது கணவருடன் அவர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் தாமரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’திரைப்பட படப்பிடிப்பில்’ என்ற கேப்ஷனுடன் கூடிய இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் சிங்கம் புலி மற்றும் ரோபோ சங்கர் ஆகிய இருவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த இருவரில் ஒருவருக்கு அவர் ஜோடியாக நடிக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இருப்பினும் இன்னும் இந்த படம் குறித்த பிற தகவல்களை தாமரை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடகங்களில் நடித்து அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தாமரை தற்போது சினிமாவில் நடிப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.