close
Choose your channels
Por
Joshwa

விக்ரமை மீண்டும் மீண்டும் கலாய்க்கும் பிக்பாஸ் குழு..!

Thursday, November 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதீப் சென்ற பின்னர் போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் வாக்குவாதங்களும் சண்டைகளும் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியாளரின் கேரக்டரை இன்னொரு போட்டியாளர் ஏற்று அவர்கள் போலவே நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் ஆண்களின் பங்களிப்பு அதிகமா? அல்லது பெண்களின் பங்களிப்பு அதிகமா? என்பது குறித்து விவாதம் நடக்கின்றது. அதற்கு ரவீனா, நிக்சன், பிராவோ மாயா உள்ளிட்டோர் வாதிடுகின்றனர்

குறிப்பாக விஷ்ணு கண்டன்டுக்காக விளையாடுகிறார் என்று தினேஷ் கூறுகிறார். இதனை அடுத்து தினேஷ் கேரக்டரில் விளையாடும் பூர்ணிமா ’கேப்டனா நான் என்ன செய்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள், ஒண்ணுமே பண்ணவில்லை, ஆனால் நான் தான் பிபி 7 டைட்டில் வின்னர்’ என்று தினேஷை கலாய்க்கிறார். அப்போது பிக் பாஸ் குழுவினர் விக்ரமை பெரிதுபடுத்தி காண்பிக்கின்றனர்.

ஏற்கனவே பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்ற கனவுடன் இருக்கும் விக்ரமை ‘கதவை சாத்துங்கள்’ என்ற வேலையை கொடுத்து கலாய்த்த நிலையில் இன்று அவரை மீண்டும் கலாய்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.