close
Choose your channels
iruttu
Capmaari

பிக்பாஸ் தமிழ் வின்னரின் முதல் படம் ரிலீஸ் தேதி!

Sunday, November 17, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் சீசன் 1 வின்னர் ஆரவ் நடித்து முடித்துள்ள ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரவ்வின் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 1 முடிவடைந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போதுதான் அதன் வின்னர் ஆரவ்வின் முதல் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ‘ராஜபீமா’, மீண்டும் வா அருகில் வா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஆரவ் ஜோடியாக காவ்யா, நிகிஷா பட்டேல் என இரண்டு நாயகிகள் நடிக்க மேலும் முக்கிய வேடங்களில் நாசர், ராதிகா, யோகிபாபு, ரோஹினி உள்பட பலர் நடித்து வருகின்றனர். அஜித் நடித்த ‘அமர்க்களம்’ அட்டகாசம், அசல் போன்ற படங்களை இயக்கிய சரண் இந்த படத்தை இயக்கியுள்ளார். சைமன் கிங் இசையில் குகன் ஒளிப்பதிவில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz