கவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு.. பிப்ரவரி 14ஆம் தேதி இன்னொரு ஸ்பெஷல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கவின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. மேலும், பிப்ரவரி 14-ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கவின், தற்போது ஒரு பிசியான நடிகராக மாறிவிட்டார். அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றை சதீஷ் இயக்கி வருகிறார் என்பதும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் டைட்டில் "கிஸ்" என்று வைக்கப்பட்டுள்ளது. மேலும், டைட்டில் உடன் கூடிய புதிய போஸ்டரை கவின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த படத்தின் டீசர் காதலர் தினத்தில், அதாவது பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படம், கவினுக்கு ஒரு திருப்புமுனை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
KISS :) @Romeopictures_ @dancersatz @mynameisraahul @JenMartinmusic @preethiasrani_ @dop_harish @peterheinoffl master #MohanaMahendiran @editorrcpranav @iamgunashekar @sonymusicsouth @bypostoffice @teamaimpr @thetabsofficial#Kiss pic.twitter.com/8vtPyUAPpY
— Kavin (@Kavin_m_0431) February 10, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com