ஆர்யா-சந்தானம் படத்தில் இணையும் பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்.. சூப்பர் தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கும் திரைப்படத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ரவீந்தர் சந்திரசேகர் என்பது தெரிந்தது. இவர் தான் இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக எலிமினேஷன் ஆன நபர் என்றாலும், இந்த நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டு தான் சென்றார். மேலும், இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பதும், பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆர்யா மற்றும் சந்தானம் நடிக்கும் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக ரவீந்தர் சந்திரசேகரன் தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் சந்தானம் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் "டிடி நெக்ஸ்ட் லெவல்" என்ற திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் தான் ரவீந்தர் சந்திரசேகர் இணைந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கவுதம் மேனன், செல்வராகவன், கீர்த்திகா கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மே மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Extremely happy !!!!@arya_offl beautiful hero and nice human
— Ravindhar Chandrasekaran (@fatmanravi) February 10, 2025
Thanks to Actor Santhanam sir and Producer Kishore on making it!!
Soon update pic.twitter.com/cGpkf2DkX6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com