close
Choose your channels
Conjuring Kannappa

பிக்பாஸ் தமிழ் சீசன் 7.. கமல்ஹாசனின் சம்பளம் இத்தனை கோடியா?

Thursday, August 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 6 சீசன்களாக ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் 7வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் முதல் சீசன் முதல் 6வது சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் 7வது சீசனையும் தொகுத்து வழங்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் 6வது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு ’விக்ரம்’ என்ற சூப்பர் ஹிட் படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததை அடுத்து கமல்ஹாசனின் மார்க்கெட் திரையுலகில் உயர்ந்து உள்ளது.

மேலும் அவர் தற்போது ’இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் அதன் பிறகு அவர் நடிக்க இருக்கும் படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் அவரது சம்பளம் திரையுலகில் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து பிக் பாஸ் 7வது சீசன் நிகழ்ச்சிக்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறும் என்றாலும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே கமல்ஹாசன் வருவார் என்பதும் அதை வைத்து பார்த்தால் 100 நாட்களில் அவர் 25 முதல் 30 நாட்கள் மட்டுமே தோன்றுவார் என்பதும் அதற்காகத்தான் அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.