close
Choose your channels
IKK
Jail

பிக்பாஸ் சீசன் 5: இன்று காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்!

Sunday, October 24, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அனல் பறந்தது என்பதும் குறிப்பாக பிரியங்கா மற்றும் அபிஷேக் ஆகிய இருவரையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கமல்ஹாசன் வறுத்தெடுத்தது பார்வையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று தாமரைச்செல்வி, இசைவாணி, அக்ஷரா மற்றும் பாவனி ரெட்டி ஆகிய நால்வர் காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும் இதனையடுத்து நேரடியாக வெளியேறுபவரின் பெயரை அறிவிக்கவிருப்பதாகவும் இன்றைய முதல் புரமோவில் கமல்ஹாசன் அறிவிக்கிறார். அவர் ஐக்கிபெர்ரி என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இன்னும் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் பிரியங்கா, அபிஷேக், சின்ன பொண்ணு மற்றும் அபினய் ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேற போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளியேறும் நால்வர் பட்டியலில் பிரியங்காவின் பெயர் இருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz