close
Choose your channels
Don

இவனெல்லாம் கேப்டனாக வந்தால் வீடு விளங்காது: இமான் அண்ணாச்சி

Monday, November 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 42 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று 43வது நாள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை புதிய கேப்டனை தேர்வு செய்யும் படலம் மற்றும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில் புதிய கேப்டனை தேர்வு செய்யும் படலம் நடைபெற்று வருகிறது. இதற்கு பிக்பாஸ் சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இமான் அண்ணாச்சி அதனை படிக்கும் போது, ‘இந்த வார தலைவர் போட்டியில் யார் தலைவராக கூடாது என்பதை தைரியமாக சொல்ல வேண்டும் என்று கூறுகிறார். குறிப்பாக இவரையெல்லாம் தலைவராக தேர்வு செய்யாதீர்கள், வீடு விளங்காது என அவர் கூறும்போது நிரூப்பை காட்டுவதும் ஒரு குறிப்பாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் ராஜு ஜெயமோகன் பிரியங்காவை தேர்வு செய்ய வந்தபோது நீங்கள் நிரூப்பை தேர்வு செய்யுங்கள், அவன் ஆளுமை வாரத்தில் என்னவெல்லாம் செய்தான் என்பது தெரியுமே என்று கூறுகிறார். அதேபோல் தாமரை, நிரூப் மற்றும் பிரியங்காவை தேர்வு செய்கிறார்.

தலைவர் போட்டிக்கு நிரூப், பிரியங்கா சிபி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகிய நால்வர் போட்டியிட்ட நிலையில் இவர்களில் யார் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்படுவார் என அடுத்தடுத்த புரமோ வீடியோ அல்லது இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.