close
Choose your channels
IKK
Jail

வெள்ளேந்தியான தாமரை செல்வியிடம் இவ்வளவு திறமையா? இணையத்தில் வீடியோ வைரல்

Thursday, October 14, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய தாமரைச்செல்வியின் நாடக நடனம் குறித்த வீடியோக்கள் தற்போது திடீரென இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அவருக்கு இவ்வளவு திறமையா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை பல்வேறு கலைஞர்கள் போட்டியாளர்களாக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாடக நடிகையான தாமரைச்செல்வி பிக்பாஸ் வீட்டில் அப்பாவியாகவும் வெள்ளேந்தியாகவும் இருப்பதை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு சுவராசியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சோக கதையை மனம் உருக வைக்கும் அளவுக்கு கூறினார் என்பதும், தனது மகன் தன்னை விட்டு பிரிந்து விட்டது குறித்து கதறி அழுதபடியே தெரிவித்தார் என்பதையும் பார்த்தோம். கண்டிப்பாக அவரது மகன் அவருடன் சேருவார் என சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

இந்த நிலையில் நாடக நடிகையான தாமரைச்செல்வி நாடகத்தில் நடிக்கும் காட்சிகளும் நடனமாடும் காட்சிகளும், காமெடியாக சக நாடக கலைஞர்களிடம் பேசும் காட்சிகளும் கொண்ட வீடியோக்கள் திடீரென தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

தாமரை செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர்தான் அவரைப் பற்றி நெட்டிசன்கள் இணையத்தில் தேடிய போது இந்த வீடியோக்கள் சிக்கியுள்ளது. இதனை அடுத்து நெட்டிசன்கள் இந்த வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அரேபியா பெல்லி டான்ஸ் முதல் உள்நாட்டு குத்து டான்ஸ் வரை செம்மையாக அவர் ஆட்டம் போடும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன என்பதும் இந்த வீடியோக்களை பிக் பாஸ் ரசிகர்கள் ரசித்து அவர் பிக்பாஸ் வீட்டில் டைட்டில் பட்டம் பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz