close
Choose your channels
Don
Nenjukku Needhi

பிக்பாஸ்: இவ்வளவு கேவலமாவாட விளையாடுவீங்க

Wednesday, December 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான தாமரை கடந்த 65 நாட்களில் பல போட்டியாளர்களுடன் சண்டை போட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டியாளர் உடன் சண்டை போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது அரசியல் மாநாடு என்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இதில் ’வெற்றி கொடி கட்டு’ என்ற புதிய டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தனித்தனியாக தங்கள் கட்சியை குறிக்கும் வகையில் 20 கொடிகள் கொடுக்கப்படும் என்றும், போட்டியாளர்கள் அனைவரும் தங்களது கட்சி கொடியை கையில் எடுத்துக்கொண்டு தங்கள் கட்சியின் ஆதிக்கத்தை காட்டும் வகையில் கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்டிருக்கும் தளத்தில் கட்சி கொடியை பொருத்த வேண்டும் என அறிவிக்கிறார்.

இதனையடுத்து போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு தங்கள் கட்சியின் கொடியை கொடிக்கம்பத்தில் பொருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது போட்டியாளர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் அபினய் மற்றும் தாமரை இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் என்ன கத்தற’ என ஆவேசமாக தாமரை பேச அவரை அபினய் அடிக்க பாய்வதும் அதை அமீர் தடுப்பதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த புரமோ வீடியோவில் இருந்து இன்று தாமரை மற்றும் அபினய் இடையே ஆக்ரோஷமாக மோதும் காட்சிகளில் இன்றைய நிகழ்ச்சியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.