close
Choose your channels

சூப்பர் ஹீரோ, புரியாத புதிர், ஆட்டோ மீட்டர்: போட்டியாளர்கள் குறித்து சஞ்சீவ் கணிப்பு!

Thursday, November 25, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆகி உள்ள சஞ்சீவ் சக போட்டியாளர்கள் கணிப்பு குறித்து கூறும் காட்சிகள் இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் உள்ளது.

வருண் குறித்து சஞ்சீவ் கூறியபோது, ‘ஆரம்பத்தில் அமைதியாக இருந்த வருண் தற்போது ஆர்ப்பாட்டமாக சூப்பர் ஹீரோ போல் விளையாடி வருகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

அதேபோல் பிரியங்காவை பார்த்து கூறியபோது ’நீங்கள் ஒரு புரியாத புதிர் என்றும் கொஞ்சினால் கொஞ்சுகிறீகள் மிஞ்சினால் மிஞ்சுகிறீர்கள், அடிக்க வேண்டுமென்றால் அடித்துக் கொள்ளுங்கள் என்ற கேரக்டர் நீங்கள்’ என்று கூறுகிறார்.

மேலும் ’இந்த கேமை ஒரு அழகான மீட்டரில் விளையாடிக் கொண்டு இருப்பவர் ராஜூ என்றும் ஆட்டோ மீட்டர் போல் இந்த மீட்டரும் விரைவில் சூடு பிடிக்கும் என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் மற்ற போட்டியாளர்கள் குறித்து சஞ்சீவ் என்ன கூறினார் என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz