close
Choose your channels
Don
Nenjukku Needhi

விஜய் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாக்குறாரா? உள்ளே வந்த போட்டியாளரிடம் சிபி கேள்வி!

Thursday, November 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 53 நாட்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தான் நிகழ்ச்சி மிகவும் சுவராசியமாக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் புதிதாக வைல்ட்கார்ட் போட்டியாளர் ஒருவர் வர இருப்பதாக உள்ள காட்சிகள் இருந்ததைப் பார்த்தோம். அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் புதிதாக உள்ளே வரும் போட்டியாளர் சஞ்சீவ் என தெரியவந்துள்ளது.

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சஞ்சீவ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பது இந்த நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளே வந்ததும் அனைவரிடமும் நலம் விசாரிக்கும் சஞ்சீவ் இமான் அண்ணாச்சியிடம் மட்டும் ஸ்பெஷலாக நலம் விசாரிக்கிறார். இந்தநிலையில் சஞ்சீவ் இடம் சிபி, ‘விஜய் சார் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றாரா? என்ற கேள்வியுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது. இந்த கேள்விக்கு சஞ்சீவ் என்ன பதில் சொல்கிறார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.