close
Choose your channels
Rocketry
Yaanai

கண்ணாடி டாஸ்க்கில் மனம் திறந்த ராஜூ: சிரித்து சிரித்து மழுப்பிய பிரியங்கா!

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரியங்காவின் நரித்தனத்தை கண்ணாடி டாஸ்க் மூலம் ராஜு காமெடியாக கூறியதை சிரித்து சிரித்து மழுப்பிய பிரியங்காவின் காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 45வது நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று உள்ளதை உள்ளபடியே காட்டும் கண்ணாடி என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பிரியங்காவின் கண்ணாடியாக ராஜு செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் பிரியங்கா குறித்து சில கருத்துக்களை கூறும்படி பிக்பாஸ் தெரிவிக்க அதற்கு பிரியங்காவின் உண்மை சொரூபம், பிரியங்காவின் நரித்தனத்தை ராஜூ காமெடியாக கூறுகிறார். ராஜூ தன்னுடைய தந்திரங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும் அதை சிரித்து சிரித்து பிரியங்கா மழுப்புகிறார்.

பிரியங்கா குறித்து ராஜு கூறும் ஒவ்வொன்றையும் கேட்டு அக்ஷரா உள்பட அனைத்து போட்டியாளர்களும் சிரிக்கின்றனர். குறிப்பாக அக்ஷராவை பற்றியும் ராஜூ கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ராஜூ மற்றும் பிரியங்கா ஆகிய இருவருமே இந்த கண்ணாடி டாஸ்க்கில் ஸ்கோர் செய்கின்றனர் என்பது மட்டும் இந்த ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.