close
Choose your channels

ஜெயிலுக்கு செல்லும் நிரூப்: வேற லெவலில் அசிங்கப்படுத்திய பிரியங்கா!

Friday, December 3, 2021 • தமிழ் Comments

மோசமாக பெர்பார்மன்ஸ் செய்தவர் என்று தேர்வு செய்யப்பட்ட நிரூப் இன்று சிறைக்கு செல்லும் நிலையில் அவரை வேற லெவலில் பிரியங்கா அசிங்கப்படுத்திய காட்சி இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க்கில் மோசமாக பெர்பார்மன்ஸ் செய்த இருவரை தேர்வு செய்யும்படி பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனை அடுத்து பெரும்பாலான போட்டியாளர்கள் நிரூப் மற்றும் பாவனியை தேர்வு செய்கின்றனர். எதிர்பார்த்தபடியே பிரியங்கா மற்றும் அபிஷேக்கும் நிரூப்பை மோசமான பேர்பார்மன்ஸ் செய்தவராக தேர்வு செய்கின்றனர்.

இதனை அடுத்து நிரூப் மற்றும் பாவனி ஆகிய இருவரும் சிறைக்கு செல்வதற்கு முன் இது குறித்து விவாதம் செய்யும் காட்சிகள் உள்ளன,. அப்போது பிரியங்கா நிரூப்பிடம், ‘உன்னை நீயே அசிங்கப்படுத்தி கொள்ளாதே என்று கூற, ‘நான் அசிங்கப்படுகின்றேனோ அல்லது நீ அசிங்கப்படுகிறாயா என்பதை பார்ப்போம் என்று கூற அதற்கு பிரியங்கா, ‘போ.. போய் ஜெயில்ல போய் உட்காரு என்று கூறி அசிங்கப்படுத்துகிறார்.

நிரூப்பை சிறைக்கு அனுப்பியது மட்டுமின்றி அசிங்கப்படுத்திய பிரியங்கா மீது வரவர இமேஜ் குறைந்து வருவதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz