close
Choose your channels
Don
Nenjukku Needhi

உள்ளே ஒரு கருத்து, வெளியே ஒரு கருத்து: ராஜூ குறித்து கமல் தெரிவித்த தகவல்

Saturday, November 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ராஜுவுக்கு உள்ளே உள்ள போட்டியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், வெளியே உள்ள பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்று கமல்ஹாசன் என்று கூறியுள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மனதில் உள்ளதை வெளியே சொல்லாமல் இருக்கும் போட்டியாளர் யார் என்பது குறித்து இருவரை தேர்வு செய்யுங்கள் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். சொல்லி வைத்தார் போல் அனைத்து போட்டியாளர்களும் ராஜு மற்றும் இமான் அண்ணாச்சியை தேர்வு செய்தனர். இதனையடுத்து இருவருக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனைவரும் ராஜூவை தேர்வு செய்தது ஏன் என கமல்ஹாசன் போட்டியாளர்கள் அனைவரிடமும் கேள்வி எழுப்பியபோது ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைக் கூறினார். இந்த நிலையில் ராஜுவை போட்டியாளர்கள் அனைவரும் மோசமான போட்டியாளராக தேர்வு செய்திருந்தாலும் வெளியே உள்ள பார்வையாளர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர் என்று கமல்ஹாசன் கூறி ராஜூ சேவ் என்று கூறுகிறார்

இதனை அடுத்து உள்ளே உள்ள போட்டியாளர்கள் மத்தியில் ராஜூவுக்கு எதிர்ப்பு இருந்தாலும் வெளியே உள்ள பார்வையாளர்கள் மத்தியில் அவருக்கு இன்னும் செல்வாக்கு உள்ளது என்பது நிரூபணமாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.