close
Choose your channels
PatamPoochi
mayoon

ஒவ்வொரு வாரமும் விளிம்புவரை வரும் அபினய்: கமல் கூறியதன் அர்த்தம் இதுதானா?

Sunday, November 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளியேற்றப்படுகிறார் என்பதும் இந்த வாரமும் நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ராஜூ ஜெயமோகன் காப்பாற்றப்பட்ட நிலையில் மீதி உள்ள 6 பேர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுகிறார் என கமல்ஹாசன் கூறும் காட்சி இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளன.

அக்சரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, அபினய் மற்றும் மதுமிதா ஆகிய 6 பேர்களில் ஒவ்வொரு முறையும் விளிம்பு வரை வந்து காப்பாற்றப்பட்டு வரும் அபினய் இந்த முறை அவர் காப்பாற்றப்படுவாரா? என்பதை பார்ப்போம் என்றும் கமல் கூறுவதோடு இன்றைய புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

இந்த வாரமும் அபினய் காப்பாற்றப்பட்டு மதுமிதா வெளியேறி விட்டார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்த நிலையில், ‘ஒவ்வொரு வாரமும் விளிம்பு வரை வரும் அபினய் என்று கமல் கூறியதிலிருந்து அடுத்த வாரம் அவர் தான் குறி வைக்கப்பட்டுள்ளாரோ? என்ற கேள்வி பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.