close
Choose your channels
Don
Nenjukku Needhi

நான் முதுகில் எல்லாம் குத்தமாட்டேன், நேரடியாகவே குத்துவேன்: இசைவாணி ஆவேசம்

Wednesday, November 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கால் போட்டியாளர்களுக்கு இடையே ஆவேசமான சர்ச்சைகளும் சண்டைகளும் வந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரமோவில் இமான் அண்ணாச்சியின் பொம்மையை இசைவாணி எடுத்து விட்டதாக பிக்பாஸ் இடம் அறிவிக்கிறார். இதனை அடுத்து பிக்பாஸ், இமான் அண்ணாச்சி இந்த டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என தெரிவிக்கிறார்

இதனை அடுத்து இமான் அண்ணாச்சியும் இசைவாணியும் வாக்குவாதம் செய்கின்றனர். நீதான் என் முதுகில் குத்துயது என இசைவாணியை நோக்கி இமான் அண்ணாச்சி கூற, அதற்கு இசைவாணி, ‘நான் முதுகில் எல்லாம் குத்த மாட்டேன் நேரடியாகவே குத்திட்டு போயிருவேன் என்று ஆவேசமாக கூறுகிறார்

அப்போது இமான் அண்ணாச்சியை உனக்கு பிடிக்காது, உனக்கு இமான் அண்ணாச்சியை பிடிக்காது என உலகத்துக்கே தெரியுமே என ராஜூ கூற அதற்குள் திடீரென பல்டி அடித்த இசைவாணி, எனக்கு இமான் அண்ணாச்சியை பிடிக்காது என்று நீ சொல்லக்கூடாது, எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறார். இதையடுத்து மீண்டும் இசைவாணீக்கும் இமான் அண்ணாச்சிக்கும் வாக்குவாதம் நடக்கும் காட்சிகள் இன்றைய புரமோவில் உள்ளன. மொத்தத்தில் இன்று இசைவாணிக்கும் இமானுக்கும் ஒரு வார்த்தைப்போர் உள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.