close
Choose your channels
Viruman
Laal

கமல்ஹாசனிடம் அபிஷேக்கை போட்டு கொடுத்த ஐக்கி, பாவனி ரெட்டி!

Sunday, October 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கும் வகையில் மூன்று புரமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ஏற்கனவே வெளியான இரண்டு புரமோக்கள் இன்றைய நிகழ்ச்சியின் டிரைலராக இருந்த நிலையில் சற்று முன் வெளியான மூன்றாவது புரோமோவில் அபிஷேக்கை ஐக்கி மற்றும் பாவனி ரெட்டி கமல்ஹாசனிடம் போட்டுக் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பிக்பாஸ் ஆரம்பித்து இரண்டு வாரங்களே ஆகும் நிலையில் இப்பவே திட்டம் போட ஆரம்பித்து விட்ட ஒரு சில போட்டியாளர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது, அவ்வாறு திட்டம் போட்டது யார் யார் என கூற முடியுமா? என கமல்ஹாசன் கேட்க அதற்கு ஐக்கி பெர்ரி, அபிஷேக்கை கைகாட்டுகிறார். அதேபோல் பவானி ரெட்டியும் அபிஷேக்கையும், அபினய் மற்றும் நிரூப் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

பிரியங்கா குறித்து ஐக்கி கூறும்போது பிரியங்காவிடம் ஏதும் திட்டம் இருப்பது போல் தெரியவில்லை, அவர் விளையாட்டுத்தனமாக கொளுத்திப் போடுகிறாரே தவிர அவரிடம் எந்தத் திட்டமும் இல்லை என்று கூறுகிறார். இதனை அடுத்து ’இங்கே அரசியலும் இருக்கு’ என்று கமல்ஹாசன் கூறுவதுடன் இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.