close
Choose your channels

பிக்பாஸ் நிரூப்புக்கு இந்த நடிகையும் நெருக்கமா? தீயாய் பரவும் புகைப்படங்கள்!

Saturday, October 16, 2021 • தமிழ் Comments

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய நிரூப் சமீபத்தில் தனது கதையை கூறியபோது யாஷிகாவால்தான் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் தனக்கு இந்த துறையில் யாரையும் தெரியாது என்றும், இந்தத் துறையில் ஓரளவு வளர்ச்சி பெற்றிருக்கிறேன் என்றால் அது யாஷிகாவினால்தான் என்றும் கூறினார்.

மேலும் ஒரு ஆணால் பல பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஒரு பெண்ணால் ஒரு ஆண் வளர்ச்சி அடைந்துள்ளதை நான் பெருமையாக பார்க்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும் தனக்கு யாஷிகாவுடன் காதல் இருந்தது என்றும் ஆனால் அதன்பிறகு நண்பர்களாகி விட்டோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் யாஷிகா குறித்து இவ்வளவு மனம் திறந்து கூறிய நிரூப், அபிராமி குறித்து எதுவுமே கூறவில்லையே என நெட்டிசன்கள் அபிராமியும் நிரூப்பும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான யாஷிகாவுடன் நிரூப் எவ்வாறு நெருக்கமாக இருந்தாரோ, அதேபோல முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான அபிராமியுடனும் அவர் நெருக்கமாக இருந்துள்ளார் என்பது வைரலாகி வரும் புகைப்படங்களில் இருந்து தெரிய வைக்கிறது. அபிராமி குறித்து இனி வரும் நாட்களில் நிரூப் கூறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz