close
Choose your channels
Don
Nenjukku Needhi

மீண்டும் தட்டிப்பறிக்கப்பட்ட கேப்டன் பதவி: யாரிடம் இருந்து யாருக்கு?

Monday, December 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கேப்டன் பதவிக்கு டாஸ்க் நடைபெறும் என்பதும் இந்த டாஸ்கில் வெற்றி பெற்றவர் கேப்டன் பதவியை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீரென நாணயத்தை பயன்படுத்தி கேப்டன் பதவியை பறித்து வரும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

கடந்த வாரம் இமான் அண்ணாச்சி கேப்டன் டாஸ்க்கில் ஜெயித்த நிலையில் அந்த பதவியை நிரூப் தட்டி பறித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வாரம் கேப்டன் பதவிக்கான ’சுற்றி சுற்றி வந்தீங்க’ என்ற பெயரில் வைக்கப்படும் மியூசிக்கல் சேர் டாஸ்க்கில் கேப்டன் பதவிக்கு உரிய போட்டியாளர்கள் விளையாடினார்கள்.

இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் அமீர் வெற்றி பெற்ற நிலையில் அமீரின் கேப்டன் பதவியை தன்னுடைய நாணயத்தை பயன்படுத்தி தட்டிப் பறிக்கும் பாவனியின் காட்சிகளோடு இன்றைய புரொமோ முடிவுக்கு வருகிறது. அமீர் மற்றும் பாவனி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக நெருக்கமாக இருந்த போதிலும் அவருக்கு கிடைத்த கேப்டன் பதவியை பாவனி தட்டிப்பறித்தது இன்றைய நிகழ்ச்சியின் டுவிஸ்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.