close
Choose your channels

அமீர்-பாவனி ரொமான்ஸ்: பிரியங்காவின் வேற லெவல் ரியாக்சன்!

Tuesday, December 7, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளராக வந்த அமீருக்கும் பாவனிக்கும் கடந்த சில நாட்களாக இடையே நெருக்கம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்றைய முதல் புரோமோவில் இருவருக்கும் உள்ள ரொமான்ஸ் காட்சிகள் வெளியாகி உள்ளது

இன்றைய முதல் புரோமோவில் ’உங்களுடைய ரசிகர் என்று நான் சொல்லும்போது நீங்கள் ஒரு சிரிப்பு சிரித்தீர்கள், அந்த சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது’ என்று அமீர் கூற அதற்கு பாவனி, ‘ஆமாம் ஆமாம் நானும் உங்களுடைய ரசிகை தான்’ என்று வெட்கத்துடன் கூறுகிறார்

அமீர் மற்றும் பாவனி ஆகிய இருவரும் ரொமான்ஸ் உரையாடல் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் பக்கத்தில் படுத்திருந்த பிரியங்கா தலையில் அடித்துக்கொண்டு ’ஐயோ ஐயோ’ என்று தன்னுடைய வேற லெவல் ரியாக்ஷனை வெளிப்படுத்தி இருப்பது காமெடியின் உச்சகட்டம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் ஓவியா-ஆரவ், கவின் - லாஸ்லியா, மகத் - யாஷிகா, பாலாஜி - ஷிவானி என ஒவ்வொரு சீசனிலும் ஒரு ரொமான்ஸ் ஜோடி கண்டெண்ட் கொடுத்து வரும் நிலையில் இந்த சீசனில் இதுவரை ரொமான்ஸ் ஜோடி இல்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு தற்போது இந்த ரொமான்ஸ் ஜோடி கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இது நீடிக்குமா? அல்லது கடந்த சீசன்கள் போல் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விடுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz