close
Choose your channels
NMM
NMM

இந்த வார நாமினேஷனில் குறி வைக்கப்பட்டவர்கள் யார் யார்?

Monday, December 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் படலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரமும் நாமினேஷன் நடைபெறுகிறது. சற்று முன் வெளியான இன்றைய முதல் புரோமோவில் போட்டியாளர்கள் நாமினேஷன் செய்து வருகின்றனர்

ஷிவானி மற்றும் ஆஜித் ஆகிய இருவரையும் சோம் நாமினேட் செய்கிறார். இவர்கள் இருவருமே பாலாவை நம்பிய விளையாடி வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரையும் அனிதாவும் நாமினேட் செய்கிறார். இந்த 78 நாட்களில் ஷிவானி என்ன செய்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை என்று அனிதா காரணமாக கூறுகிறார்

பாலாஜி சோம்சேகரை நாமினேட் செய்கிறார். கேபி மற்றும் ஆரி ஆகிய இருவரையும் ரம்யா நாமினேட் செய்கிறார். மற்றவர்களின் பேச்சை புரிந்து கொள்ளாமல் ஆரி இருப்பதாக ரம்யா காரணமாக கூறுகிறார்

கேபி மற்றும் ஷிவானியை ஆரி நாமினேட் செய்கிறார். அனிதா மற்றும் ஆரியை ஆஜித் நாமினேட் செய்கிறார். மேலும் கேப்ரில்லா அனிதாவையும் ரியோ ஆரியையும் நாமினேட் செய்கின்றனர்.

மொத்தத்தில் இந்த வார நாமினேஷனில் ஷிவானி, ஆஜித், அனிதா, ஆரி, கேபிரில்லா ஆகிய ஐவர் நாமினேட் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. இன்னும் யாரெல்லாம் நாமினேஷனில் உள்ளார்கள் என்பதை அடுத்தடுத்த புரமோவில் பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.