close
Choose your channels
NMM
NMM

ரியோவை ஜீரோவாக்கிய ரம்யா, கேபியை டார்கெட் செய்த பாலா: இறுதிக்கட்டத்தில் பந்து டாஸ்க்!

Thursday, December 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த பந்து டாஸ்கில் நேற்று பிக் பாஸ் இதுவரை விளையாடிய வரையில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான ரேட்டிங்கை தேர்வு செய்யுமாறு தெரிவித்து இருந்தார். அந்த வகையில் ரியோ முதலிடத்தையும் ரம்யா இரண்டாவது இடத்தையும் சோம் 3வது இடத்தையும் பிடித்தனர். இவர்கள் மூவருக்கும் ஒரு சிறப்பு சலுகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று நடைபெறும் டாஸ்க்கில் தங்க நிறத்திலான பந்துகள் வரும் என்றும் அந்த பந்துகளை பிடித்தால் அவர்களுக்கு உடனடியாக ஒரு சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது. இதனையடுத்து தங்கநிற பந்துகளை போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பிடித்து வருகின்றனர்.

தங்கநிற பந்துகளை பிடித்தவர்கள் போர்டில் இருக்கும் சக்திகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதனை செயல்படுத்தலாம் என அறிவிக்கப்படுகிறது. அதன்படி பாலா எடுத்த சக்தியின் மூலம் ஒரு போட்டியாளருக்கு 100 புள்ளிகள் அதிகம் கிடைக்கின்றது. அதேபோல் ரம்யா, ஒரு நபரின் மதிப்பெண்களை பூஜ்யம் ஆக்கலாம் என்ற சக்தியை எடுத்து ரியோவை பூஜ்யமாக்கினார். மேலும் இதே சக்தியை தேர்வு செய்த கேபி, பாலாவை பூஜ்யமாக்கினார். இதனால் கடுப்பான பாலா, அடுத்த ஜீரோ நீதான்’ என்று கூறுவதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுகு வருகிறது

மொத்தத்தில் இந்த டாஸ்க்கிலும் ரியோ தலைமையிலான மூவரும், பாலா தலைமையிலான மூவரும் குரூப்பாக விளையாடி வருகின்றனர் என்பது தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.