close
Choose your channels
anabel
friendship

இந்த வாரம் டபுள் எவிக்சன், உறுதி செய்த கமல்: அன்பு குரூப்புக்கு ஆப்பு?

Saturday, December 12, 2020 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 69வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 31 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 12 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே இருக்கிறார்கள். எனவே இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியே வந்ததைப் பார்த்தோம்

இதனை அடுத்து தற்போது டபுள் எவிக்சன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய முதல் புரோமோவில் கமல் கூறிய போது ’பலமுறை சொல்லி பார்த்து விட்டேன். ஜோடியாக விளையாடினீர்க்ள் என்றால் ஜோடியாக வெளியே போக வேண்டிய நிலை வரும். கூட்டமாக விளையாடினால் கூண்டோடு கைலாசம் என்று. கேட்க மாட்டேன் என்கிறீர்கள். நீங்கள் உங்கள் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டீர்கள். நான் கேள்விப்பட்ட வரையில் இந்த வாரம் இரண்டு எவிக்சன். அதில் ஒன்றை இன்றே செய்வோம் என்று கமல் கூறியுள்ளார்

கமல் ஜோடி குறித்து கூறிய போது சோம்-கேபி ஜோடியும், கூண்டோடு கைலாசம் என்று கூறும்போது அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் சோம் ஆகியோர் திரையில் தோன்றுவதால் இந்த வாரம் வெளியேறப்போவது சோம்-கேபி ஜோடியா? அல்லது கூண்டோடு கைலாசமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Get Breaking News Alerts From IndiaGlitz