'மெர்சல்' பாடலுக்கு நடனம் ஆடிய பாலாஜி-ஷிவானி: ஒரு முடிவோட தான் இருக்காங்க போல!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 20 நாட்களாக அமைதியாக இருந்த ஷிவானி, தனக்கு மிங்கிள் ஆவதற்கு கொஞ்சம் டைம் என கமல்ஹாசனிடமே கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் கூறியதுபோல் தற்போதுதான் கொஞ்சம் தேறி பேச ஆரம்பித்துள்ளார்.
அவர் பேச ஆரம்பித்தது மட்டுமின்றி பாலாஜியுடன் ரொமான்ஸ் செய்யவும் ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. கடந்த இரண்டு நாட்களாக பாலாஜியுடன் அவர் ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சிகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமான கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் ஒரு டாஸ்க்கில் பாலாஜி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் தளபதி விஜய் நடித்த மெர்சல் பட பாடலுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடுகின்றனர். அச்சு அசலாக விஜய்-காஜல் அகர்வால் போலவே அவர்கள் ஆடும் ஆட்டம் போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாகவே உள்ளது.
ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் ஒரு காதல் ஜோடி, அந்த சீசன் முடியும் வரை எண்டர்டெயின்மெண்ட் செய்து கொண்டிருப்பார்கள் என்ற நிலையில் இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை பாலாஜி-ஷிவானி ஜோடி எண்டர்டெயின் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day26 #Promo4 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/RwZzd4Jeyp
— Vijay Television (@vijaytelevision) October 30, 2020