close
Choose your channels
Rajavamsam

ஆரியா? அர்ச்சனாவா? நேருக்கு நேர் மோதல்

Monday, November 2, 2020 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடக்கும் என்பதும் இந்த நாமினேஷன் படலத்தில் சிக்கியவர்களில் ஒருவர் அந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வேல்முருகன் வெளியேற்றப்பட்ட நிலையில், சுசித்ரா உள்ளே வந்துள்ளார் என்பதால் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது., இந்த நிலையில் இன்றைய நாமினேஷன் படலத்தில் பிக்பாஸ் வீட்டில் குருப்பிஸம் இருப்பதாக குற்றம் சாட்டிய ஆரியும், உண்மையிலேயே குரூப்பை வைத்து டாமினேட் செய்து கொண்டிருக்கும் அர்ச்சனாவும் பலரால் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்

நேற்று புதிதாக வந்த சுசித்ரா உள்பட அர்ச்சனாவை நாமினேஷன் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆரியை அர்ச்சனாவும், அர்ச்சனாவை ஆரியும் மாறிமாறி நாமினேட் செய்து கொண்டனர். பாலாஜி, ஷிவானி, சோம், சம்யுக்தா ஆகியோர் ஆரியையும், அனிதா, சனம், சுசித்ரா ஆகியோர் அர்ச்சனாவையும் நாமினேட் செய்துள்ளனர்.,

இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் குரூப்பை வைத்து அரசியல் நடத்தி வரும் அர்ச்சனாவா? அல்லது குருப்பிஸம் இருப்பதை தைரியமாக வெளிப்படுத்திய ஆரியா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz