close
Choose your channels

நான் மோசமான போட்டியாளரா? புலம்பி கொண்டே சிறை செல்லும் அனிதா!

Friday, December 11, 2020 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் புதிய மனிதா என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்ட நிலையில் இதில் சிறப்பாக செயல்பட்டவர்கள், ஒட்டுமொத்தமாக இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர் மற்றும் மோசமாக செயல்பட்டவர்கள் ஆகியவர்களை தேர்வுசெய்யும் படலம் நேற்று நடந்தது

இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என ரம்யா மற்றும் பாலாஜி தேர்வு செய்யப்பட்டனர். இதனை அடுத்து வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர் என நிஷா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மோசமான போட்டியாளரை தேர்வு செய்யும்போது அர்ச்சனா குரூபினர் அனிதாவை டார்கெட் செய்தனர். அர்ச்சனா குரூப்பில் உள்ள ஒவ்வொருவரும் அனிதாவை மோசமான போட்டியாளர் என குறிப்பிடும் போது அவரது முகம் மாறியதை பார்க்க முடிந்தது. அனிதா மோசமான போட்டியாளர் என ரியோ கூறியபோது இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்பின் மோசமான போட்டியாளர்களாக அனிதா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதனை அடுத்து சிறைக்கு செல்லும் முன் அனிதா ரம்யாவிடம் புலம்பி தள்ளினார். இந்த வாரம் முழுவதும் நான்தான் கிச்சன் டீமில் அதிக வேலை செய்தேன். எனக்கு கொடுத்த கேப்டன் பொறுப்பையும் நான் சிறப்பாக செய்தேன். ஒருசில இடத்தில் மட்டும் தான் சிறப்பாக செய்யவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த வாரத்திலும் நான் மோசமான போட்டியாளரா? என ரம்யாவிடம் அனிதா புலம்பினார்

மேலும் மோசமான போட்டியாளர்களை தேர்வு செய்வதில் முழுக்க முழுக்க நம்பர் கேம் உள்ளது என்றும் தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை வெளியேற்றுவது தான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது என்றும் சனம் ஷெட்டியை அடுத்து என்னை வெளியேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடி வருவதாகவும் அனிதா புலம்பியபடியே சிறைக்குச் சென்றார்

மோசமான போட்டியாளர்கள் மற்றும் சிறப்பான போட்டியாளர்களை தேர்வு செய்யும்போது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாமல் நாமினேஷன் படலம் போல் இல்லாமல் செயல்பட வேண்டும் என கமலஹாசன் ஏற்கனவே பலமுறை கூறியும் அர்ச்சனா குரூப்பினர் திருந்தவில்லை என்பதால் கமல்ஹாசன் நாளை தனது சாட்டையை சுழற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz