close
Choose your channels
cred

ஆரியிடம் மனைவி கூறியது என்ன?

Thursday, December 31, 2020 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் வெளியான வீடியோவில் ஆரியின் மனைவி மற்றும் குழந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.

ஒருபக்கம் ஆரியின் குழந்தையிடம் ஹவுஸ்மேட்ஸ்கள் விளையாடி கொண்டிருக்கும்போது ஆரியுடன் அவரது மனைவி தனியாக உட்கார்ந்து பேசுகிறார். அப்போது அவர், ‘எனக்கு என்ன பிடிச்சதுன்னா நீங்க யாரையும் ஹர்ட் பண்ணவே இல்லை. மேலும் நீங்க வீட்டில எப்படி இருக்கிங்களோ அப்படியே தான் இங்கேயும் இருக்கிங்க. எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலை. வீட்டில் இருக்குற மாதிரியே இங்கேயும் இருந்தால் நாம் போலியா இருக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறுகிறார். அப்போது ஆரி தன்னை நினைத்தே பெருமைப்படுகிறார்.

முன்னதாக ஆரியின் குழந்தை தனக்கும் டாஸ்க் வேண்டும் என்று கூற அதற்கு பிக்பாஸ், ‘கன்பெக்சன் அறைக்கு சென்று அம்மாவை கூட்டிட்டு வாருங்கள்’ என்று கூறியவுடன் ஆரியும் அவரது குழந்தையும் கன்பெக்சன் அறைக்கு சென்று ஆரியின் மனைவியை அழைத்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் அனைவரும் கிட்டத்தட்ட வந்துவிட்டனர். இனிவரும் வாரங்களில் பிக்பாஸ் போட்டியாளர்கள்   புத்துணர்ச்சியுடன் போட்டிகளில் பங்குபெருவார்கள் என எதிர்ப்பார்க்கலாம் ..

 

Get Breaking News Alerts From IndiaGlitz