close
Choose your channels
cred

கேப்டன் போட்டியில் மல்லுகட்டும் கேப்ரில்லா-ஆஜித்!

Friday, November 13, 2020 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை அடுத்த வாரத்தின் கேப்டன் தேர்வு செய்யப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று அடுத்த வார கேப்டன் குறித்த தேர்வுக்கு நாமினேஷன் செய்யப்படுகிறது

அடுத்த வாரத்தில் கேப்டனை தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டது என பிக்பாஸ் கூறியதும் பாலாஜி சோம்சேகருக்கு ஆதரவு அளித்தார். கடந்த வாரமும் அவர் சோம்சேகருக்கு தான் ஆதரவாளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் நிஷாவை ஷிவானி, ரமேஷ் ஆகியோர் நாமினேட் செய்தனர். நிஷாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அவர் கேப்டனாக வந்தால் தனக்கு மகிழ்ச்சி என்றும் ஷிவானி கூறினார். ரம்யா, ஆரி மற்றும் சோம் ஆகியோர் கேப்ரில்லாவை கேட்பனாக்க நாமினேட் செய்தனர். அதேபோல் ஆஜித்தையும் ஒருசிலர் கேப்டனுக்கு நாமினேட் செய்தனர்.

இந்த நிலையில் இந்த வார கேப்டன் டாஸ்க்கில் நிஷா, சோம், கேப்ரில்லா மற்றும் ஆஜித் ஆகிய நால்வர் நாமினேஷன் செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இவர்களில் ஆஜித் மற்றும் கேப்ரில்லா ஆகிய இருவரும் கேப்டன் டாஸ்க்கில் அதிகபட்சமாக மல்லுக்கட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சோம்சேகர் கேப்டன் டாஸ்க்கை விளையாடுவதில் வல்லவர் என்றாலும் ஆஜித், கேப்ரில்லாவுக்காக விட்டுக்கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Get Breaking News Alerts From IndiaGlitz