close
Choose your channels
NMM
NMM

ரியோவுக்கு ஒரு குறும்படம்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

Friday, December 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் நடந்த புதிய மனிதா டாஸ்க்கில் குரூப்பிஸம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது மட்டுமின்றி அந்த குரூப்பில் உள்ள ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு பொய்யர்கள் என்பதும் தெரிய வருகிறது. ஆனால் இதெல்லாம் நெட்டிசன்களின் குறும்படத்தால் தால் வெளிச்சத்துக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே நிஷா மற்றும் ஆரி குறித்த குறும்படங்கள் இன்று நெட்டிசன்களால் வந்த நிலையில் சற்றுமுன் ரியோ எந்த அளவுக்கு தனது அணிக்கு துரோகம் செய்து அர்ச்சனா அணிக்கு சாதகம் செய்தது தெரிய வருகிறது

சற்றுமுன் வெளியான நெட்டிசன் ஒருவரின் குறும்படத்தில், ‘உங்களுக்கு தெரிந்தவர்கள் செய்தால் தப்பில்லை, தெரியாதவர்கள் செய்தால் தப்பு என்ற ஃபேவரிட்ஸம் உங்களிடம் இருப்பதாக ரியோவிடம் அனிதா கூறியபோது, அனிதாவை ரியோவும் கேப்ரில்லாவும் வீண்பழி சுமத்துவதாக கூறினர்.

ஆனால் சில நிமிடங்களிலேயே அர்ச்சனா, கேபி, நிஷா இருக்கும்போது ரியோ, ‘எனக்கு தெரியும், கேபி சிரிச்சிட்டான்னு, இருந்தாலும் அவளை காப்பாத்த நான் முயற்சி செய்தேன், நீ உண்மையிலேயே சிரிச்ச’ என்று கூறுகிறார். நெட்டிசன்களின் இந்த குறும்படத்தால் ரியோவின் முகமூடி கிழிந்துள்ளது. கண்டிப்பாக கமல்ஹாசனோ, பிக்பாஸோ அர்ச்சனா குரூப்புக்கு குறும்படம் போட மாட்டார்கள் என்று தெரிகிறது. குறைந்தபட்சம் நெட்டிசன்கள் குறும்படங்களை பார்த்தாவது பார்வையாளர்கள் திருப்திபட்டு கொள்ள வேண்டியதுதான்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.