close
Choose your channels
IKK
Jail

உன்னை பிச்சு திங்க போறேன் நானே: மதுவந்திக்கு விளக்கம் அளித்த ராஜூ ஜெயமோகன்

Thursday, October 14, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதுவரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் போட்டியாளர்கள் ஜாலியாக சிரிப்பும் கும்மாளமுமாக இருந்து வருகிறார்கள் என்பதும் அவர்களுடைய சொந்த கதையை கூறும்போது மட்டும் சோகம் பிழிந்து எடுக்கும் வகையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய இரண்டு புறமோவில் நிரூப் மற்றும் நாடியாசிங் ஆகியோர் தங்கள் கதைகளை கூறிய நிலையில் மூன்றாவது புறமோவில் காமெடி காட்சிகள் உள்ளன. இந்த காட்சியில் மதுமிதாவுக்கு ஜெயமோகன் பாடல் சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் உள்ளன

குறிப்பாக ’உன்ன பிச்சி திங்க போறேன் நானே’ என்ற வரிகளுக்கு என்ன அர்த்தம் என்பதை ராஜூ ஜெயமுருகன் தனது பாணியில் காமெடியாக விளக்கம் அளிப்பதை புரியாமல் மதுமிதா முழிக்க, சுற்றியிருப்பவர்கள் சிரிக்கும் காட்சிகள் உள்ளது. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் கலக்கலான காமெடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz