close
Choose your channels
capmaari
capmaari
champion

சாண்டியிடம் தப்பித்த கவின், சிக்கிய ஷெரின்

Thursday, August 29, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா ரொமான்ஸ் தான் அதிகமாக கவனிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. விஜய் டிவியின் புரமோ வீடியோவிலும் பெரும்பாலும் கவின், லாஸ்லியா ரொமான்ஸ் தான் உள்ளது

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் கவின் நல்ல வேளையாக தப்பித்தார். அவருக்கு பதில் தர்ஷனும் ஷெரினும் சிக்கியுள்ளனர். இன்றைய வில்லுப்பாட்டு டாஸ்க்கில் தர்ஷன் ஷெரின் காதல் குறித்து சாண்டி பாட்டுப்பாட அதற்கு ஜோராக லாஸ்லியா, முகின், வனிதா ஆகியோர் கோரஸ் போட, ஷெரின் சிணுங்குகிறார். 

சாண்டி அசல் வில்லுப்பாட்டு கலைஞராகவே மாறியுள்ளதால் அவர் இந்த வாரம் பெஸ்ட் ஃபெர்மார்மராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் இன்று முழுவதும் ஹவுஸ்மேட்ஸ்கள் ஜாலியாக இருப்பதால் நிகழ்ச்சியும் சுவாரஸ்யமாக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz