close
Choose your channels
Conjuring Kannappa

3 வருடம் காதல், 3 வருடம் திருமண வாழ்க்கை: கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் தமிழ் பிரபலம்!

Tuesday, August 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் வைஷ்ணவி என்பது தெரிந்ததே.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலர் அஞ்சான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மூன்று வருடம் காதலித்து அதன்பின் திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி, தற்போது மூன்று வருட திருமண வாழ்க்கையை அடுத்து தனது கணவரை செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பதாவது: மூன்று வருடம் காதல் மற்றும் மூன்று வருடம் திருமண வாழ்க்கை என ஆறு வருடங்கள் ஒன்றாக இருந்தபோதிலும் நானும் அஞ்சானும் பிரிய முடிவு செய்துள்ளோம். நான் அவரை இன்னும் காதலிக்கிறேன், ஆனால் உறவின் அழுத்தம் இல்லாமல் நாங்கள் நண்பர்களாக இருக்க முடிவு செய்து நீண்ட ஆலோசனைக்கு பின்னர் பிரிய முடிவு செய்தோம்.

எங்கள் இருவரின் இடையே நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் நாங்கள் நண்பர்களாக இருப்பது தான் சிறந்தது என்று இருவரும் இணைந்து முடிவெடுத்துள்ளோம். வேறு எதுவும் நீங்கள் யூகிக்க வேண்டாம், எங்களுக்கு எந்தவிதமான மோசமான நிகழ்வுகளும் நடக்கவில்லை. எங்களுக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம், ஏனெனில் நானே அஞ்சானை பிரிந்ததற்காக வருத்தப்படவில்லை.

இன்னும் நாங்கள் நண்பர்களாக தான் இருக்கிறோம். தம்பதிகளாக இருப்பதைவிட நண்பர்களாக இருப்பது சிறந்தது என்று முடிவு செய்துள்ளோம்’ என வைஷ்ணவி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல எழுத்தாளர் ‘சாவி’ அவர்களின் பேத்தியான வைஷ்ணவி பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.