close
Choose your channels
Don
Nenjukku Needhi

நீண்ட இடைவெளிக்கு பின் பிக்பாஸ் சுரேஷ் நடிக்கும் படம்: வைரல் வீடியோ!

Monday, February 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். ஆரி உள்பட ஒருசில போட்டியாளர்கள் ஏற்கனவே திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி விட்ட நிலையில் இன்னும் சிலர் திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரின் விருப்பத்திற்குரிய போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் பெற்றார் என்பதும், தற்போது அந்த பிரபலத்தின் அடிப்படையில் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை சுரேஷ் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார். அதில் அர்ஜுன் சிதம்பரம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்றில் தானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகர் அர்ஜுன் சிதம்பரம் ஏற்கனவே அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் என்பதும் தற்போது அவர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் துஷாரா நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவேளைக்குப்பின் சுரேஷ் சக்கரவர்த்தியை மீண்டும் பெரிய திரையில் பார்க்க இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.