பிக்பாஸ் சோம்சேகரின் முதல் வீடியோ: உடல்நிலை குறித்த முக்கிய தகவல்!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடைபெற்று முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரின் அன்புக்குரியவரும் பிக்பாஸ் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றவர்களில் ஒருவராக இருந்தவர் சோமசேகர் என்பது தெரிந்ததே. அன்பு குருப்பின் ஒரு உறுப்பினராக அவர் இருந்தாலும் மற்ற போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி வந்தார் என்பதும் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அவர் விளையாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை அருமையாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வராமல் இருந்த சோம்சேகர், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
உங்களுடைய அன்பு ஆதரவு அனைத்துக்கும் நன்றி. என்னை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றதற்கு மிக மிக நன்றி. அனைவருக்கும் நான் கடமைப்பட்டவனாக இருப்பேன். நான் கடந்த மூன்று நான்கு நாட்கள் சமூக வலைதளங்களில் வரவில்லை. எனக்கு கொஞ்சம் உடல் நலம் சரியில்லாமல் இருந்தது
தற்போது நான் குருவாயூரில் உள்ளேன். குருவாயூரில் உங்களுக்கும் எனக்கும் சேர்த்து சாமியை வேண்டிக் கொண்டேன். விரைவில் நான் சென்னை வந்த பிறகு உங்களுடன் பேசுகிறேன் என்று கூறினார்
மேலும் உங்களுடைய அனைத்து விமர்சனங்களையும் கேள்விகளை நான் பார்த்தேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் நான் பதில் கூறுவேன். லைவ்வில் விரைவில் வருவேன் என்று கூறினார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.