close
Choose your channels
LoveToday
CWK

களைகட்டிய பிக்பாஸ் சோம்சேகர் பிறந்த நாள் விழா: வைரல் புகைப்படங்கள்!

Tuesday, March 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற சீசன்களை விட பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வித்தியாசமானவர்களாக உள்ளனர். குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் கருத்துவேறுபாடுகளுடன் இருந்தாலும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஒருவருக்கொருவர் அவ்வப்போது சந்தித்து கொண்டு தங்களது நட்பை புதுப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு முந்தைய சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இதனை பின்பற்றியதாக தெரியவில்லை. பிக்பாஸ் சீசன் 4 முடிந்து இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் போட்டியாளர்கள் அடிக்கடி ஒருவரை ஒருவரை ஒருவர் சந்தித்து இன்ப,துன்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர்

அந்த வகையில் சமீபத்தில் சோமசேகர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பாலாஜி, ஷிவானி, கேபி, சம்யுக்தா, ரியோ மற்றும் அவருடைய மனைவி ஸ்ருதி, சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா, வேல்முருகன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பது ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.