'பிக்பாஸ்' ஷிவானியின் 'வைட்டமின் D' புகைப்படம் வைரல்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்களால் புகழ்பெற்றவர் நடிகை ஷிவானி நாராயணன் என்பதும் அவருக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. தினமும் மாலையில் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்காக இளைஞர்கள் காத்திருப்பார்கள் என்பதும் அவருடைய புகைப்படம் பதிவானவுடன் லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவியும் என்பதும் தெரிந்ததே.
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது அவர் பாலாஜியை காதலிப்பதாக வதந்தி எழுந்தபோது அவருக்கு எதிர்ப்புகள் அதிகமானாலும் தற்போது மீண்டும் அவருக்கு ஃபாலோயர்கள் அதிகமகி வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்ய தொடங்கி உள்ளார் ஷிவானி என்பதும் இந்த புகைப்படங்களுக்கும் வழக்கம் போல ஃபாலோயர்களின் ஆதரவு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் ஷிவானி பதிவு செய்துள்ள வித்தியாசமான போஸ் கொண்ட புகைப்படத்திற்கு அவர் ‘வைட்டமின் D' என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கும் வழக்கம்போல் ரசிகர்கள் தங்களது பாணியில் சிங்கப்பெண் ஷிவானி குறித்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.