close
Choose your channels

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் கடைசி புரமோவில் இருப்பது என்ன?

Sunday, January 17, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்னும் சில நிமிடங்களில் தொடங்க இருக்கும் நிலையில் சற்றுமுன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து இன்று வரை தினமும் மூன்று புரமோ வீடியோக்கள் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகி வருகிறது. அந்த வகையில் இன்று ஏற்கனவே இரண்டு புரமோ வீடியோக்கள் வந்துவிட்ட நிலையில் இன்று மூன்றாவது புரமோ விடியோ அதாவது இந்த நிகழ்ச்சியின் கடைசி புரமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது.

அதில் கமலஹாசன் அவர்கள் ’மக்கள் தீர்ப்பு’ என்ற பெட்டியில் இருந்து வின்னர் யார் என்பதை அறிவிக்கும் கார்டை எடுத்து தனது பையில் வைத்து கண் அடிக்கும் காட்சிகள் உள்ளன. அதன்பின்னர் பின்னணியில் கண் கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பாதையில் கமல்ஹாசன் ஸ்டைலாக நடந்து வருவதும் அதனை அடுத்து வின்னர் கோப்பையையும் மாறி மாறி இருக்கும் காட்சிகள் அதில் உள்ளன.

இந்த கோப்பையை கமல்ஹாசன் கையால் ஆரி வாங்க போகும் காட்சியை காண பல கோடி பிக்பாஸ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz