close
Choose your channels
NMM
NMM

'குக் வித் கோமாளி' பிரபலங்களுடன் இணைந்த 'பிக்பாஸ்' பிரபலங்கள்: வைரல் புகைப்படங்கள்

Sunday, April 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் ஃபினலே நிகழ்ச்சி ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிம்பு, ஏ ஆர் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டார்கள் என்பதும் முன்னோட்டத்தில் இருந்து தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 4 பிரபலங்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளது வெளிவந்துள்ள புகைப்படங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள விதவிதமான புகைப்படங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்களான பாலாஜி, கேப்ரில்லா, ஷிவானி, சனம், ரேகா, அனிதா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் குக் வித் கோமாளி பிரபலங்களான கனி, அஸ்வின், தர்ஷா, ரித்திகா, ஷகிலா, பவித்ரா உள்ளிட்டவர்களும் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.