close
Choose your channels

ஆளுயர மாலை, மேளதாளங்கள், பட்டாசுகள்: பிக்பாஸ் ரியோவுக்கு மாஸ் வரவேற்பு

Wednesday, January 20, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் சீசன் 4 சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலாஜி, சோமசேகர், ரம்யா மற்றும் ரியோ ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதும் இதில் ஆரி டைட்டில் வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் வென்றார்கள் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ரம்யா, சோம் சேகர், ஆகியோர் தங்கள் வீட்டிற்கு சென்ற போது மேள தாளத்துடன் வரவேற்கப்பட்டது குறித்த வீடியோக்களை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் தற்போது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றவர்களில் ஒருவரான ரியோ ராஜை அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்கும் வீடியோ வெளியாகியுள்ளது.  மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடிக்க, ரியோவுக்கு ஆளுயர மாலை அணிவித்து அவரது நண்பர்கள் அசத்திவிட்டனர் 

மேலும் தன்னுடைய குழந்தையை நீண்ட நாட்களுக்கு பின்னர் நேரில் பார்த்து ரியோ, கட்டியணைத்து முத்தமிட்ட உருக்கமான காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

கடைசியாக ரியோவுக்கு அவருடைய ஃபேமஸ் வசனமான ‘டேக் இட்டு’ என்ற வாசகங்கள் கொண்ட புகைப்படம் ஒன்றையும் அவரது நண்பர்கள் அவருக்கு பரிசாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz