close
Choose your channels
Don
Nenjukku Needhi

மனைவியுடன் ஜாலியாக திருமண நாளை கொண்டாடிய ரியோ: வைரல் புகைப்படங்கள்

Tuesday, February 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய ரியோ, இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட ஐவரில் ஒருவராக இருந்தார் என்பது தெரிந்ததே. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் காட்டுக்கு செல்வேன் என கமல்ஹாசனிடம் வாக்குறுதி கொடுத்த நிலையில் மனைவி மற்றும் மகளுடன் காட்டுக்குச் சென்று நிம்மதியாக ஒரு சில நாட்கள் தங்கியிருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தார் ரியோ.

இந்த நிலையில் காட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தற்போது மனைவியுடன் திருமண நாளை ஜாலியாக கொண்டாடியுள்ளார். திருமண நாளில் மனைவியுடன் கடலில் குளிப்பது மற்றும் ஜாலியாக திருமண நாளைக் கொண்டாடியது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ரியோ. மேலும் அவர் தனது திருமண நாளை அடுத்து அவர் மனைவிக்கு கூறியதாவது:

நான் ஒரு சார்ந்த நபர் தான்.. நீ என் வாழ்க்கையை மிகவும் அழகாக மாற்றினாய். உன்னை வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என நான் உறுதி கூறுகிறேன். திருமண நாள் வாழ்த்துகள் என தனது மனைவி ஸ்ருதியின் இன்ஸ்டா ஹேண்டிலை குறிப்பிட்டு ஐ லவ் யூ சோ மச் என்று பதிவு செய்துள்ளார்.

ரியோவின் இந்த பதிவுக்கு பிக்பாஸ் சக போட்டியாளர்களான ரம்யா பாண்டியன், சம்யுக்தா, கேபிரியல்லா உள்ளிட்டோர் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் ரியோவின் ரசிகர்களும் ரியோ மற்றும் ஸ்ருதிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.