close
Choose your channels
Don
Nenjukku Needhi

செம ஆட்டம் போட்ட பிக்பாஸ் ராஜூ: உடன் ஆடியவர்கள் யார் யார் தெரியுமா?

Wednesday, January 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆன ராஜு ஜெயமோகன் செம ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ராஜூ தான் என்பது கடந்த சில வாரங்களுக்கு முன்பே தெரிந்தது போலவே அனைவரும் எதிர்பார்த்தபடி ராஜூ டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டு 50 லட்ச ரூபாய் பரிசு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராஜுவின் பேட்டிகள் மற்றும் அவரது செய்திகள் இணைய தளங்களில் வைரலாகி வரும் நிலையில் சமீபத்தில் ராஜூ செம ஆட்டம் ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பிரபல கானா பாடலான தொரத்தாதய்யா என்ற பாடலுக்கு ராஜூ செம ஆட்டம் ஆடியுள்ளார். அவருடன் அமீர், நாடியா சாங் உள்பட பலரும் சேர்ந்து நடனம் ஆடியுள்ளனர். ராஜூவின் ஆட்டத்தை வேடிக்கை பார்த்ததோடு தனது மொபைல் போனில் தாமரைசெல்வி வீடியோ எடுத்த காட்சியும் உள்ளது.

பிக் பாஸ் ராஜு ஏற்கனவே கதாசிரியர், உதவி இயக்குனர், நடிகர், பாடகர், மிமிக்ரி கலைஞர் என பல்வேறு திறமைகளை கொண்டுள்ள நிலையில் தற்போது அவர் ஒரு நல்ல டான்ஸர் என்பதும் இந்த வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.