close
Choose your channels

காதலிக்கு முத்தம் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்: விமான நிலையத்தில் பரபரப்பு!

Saturday, May 8, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் பிரபலம் ஒருவர் விமான நிலையத்தில் தனது காதலிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் இந்தி சீசன் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ராகுல் வைத்யா. இவர் இந்த சீசனின் ரன்னர் அப் என்பதும் இரண்டாம் இடம் பிடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராகுல் வைத்யா பிரபல டிவி நடிகையும் மாடலுமான திஷா பர்மர் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்த நிலையில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக ராகுல் வைத்யா தென்னாப்பிரிக்கா சென்றார். அப்போது விமான நிலையத்திற்கு செல்லும் போது அவர் தனது காதலியையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

விமான நிலையத்தில் காதலியிடம் விடைபெறும்போது திஷா பர்மரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz