நயன்தாரா பட நாயகனின் படத்தில் அறிமுகமாகும் பிக்பாஸ் லாஸ்லியா!
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இடம்பெற்ற போட்டியாளர்களில் ஒரு சிலர் திரையுலக வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் 3ஆம் இடம் பிடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த லாஸ்லியாவுக்கும் தற்போது திரையுலக வாய்ப்பு கிடைத்துள்ளது
நயன்தாராவின் மாயா உள்பட பல படங்களில் நடித்த நடிகர் ஆரி நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க லாஸ்லியா ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றதாகவும் புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷன், சாக்ஷி ஆகியோர் ஏற்கனவே ஒரு சில படங்களில் கமிட்டாகி உள்ள நிலையில் தற்போது லாஸ்லியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.