close
Choose your channels

மாயா கேப்டன்சி குறித்து கானா பாலா சொன்ன நச் பதில்.. யாருமே பாராட்டாத கேப்டன்..!

Sunday, November 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் மாயா கேப்டன் ஆக இருந்த நிலையில் மாயாவின் கேப்டன்ஷிப் எப்படி இருந்தது என்று கமல்ஹாசன் கேட்கும்போது அதற்கு சக போட்டியாளர்கள் சொல்லும் பதில் குறித்த ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முதலில் மாயா கேப்டன்சி குறித்து கானா பாலா ’சண்டை போட்டுக்கலாம் சனிக்கிழமை பாத்துக்கலாம் என்ற மாதிரி ஆயிருச்சு சார்’ என நச்சென்று கூறினார். ’மாயா கேப்டன்ஷிப்பில் சின்னச்சின்ன தவறுகள் நடந்தது உண்மைதான் சார்’ என்று பூர்ணிமா கூறிய போது ’சின்ன சின்ன தவறுகள் தான் நடந்ததா? என கமல்ஹாசன் கிண்டலுடன் கேட்க பூர்ணிமா அமைதியாகிவிட்டார்.

’மாயா மட்டும் தன்னிச்சையாக செயல்பட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்று கூல் சுரேஷ் கூற ’அவர் தன்னிச்சையாக செயல்படவில்லை என்று கூறுகிறீர்கள்’ என கமல்ஹாசன் எடுத்து கூறினார்.

’தோழிகள் எல்லாம் கூட நின்று சூப்பர் மாயா என்று சொல்லி, வேண்டும் என்றே செய்தது மாதிரி இருந்தது’ என்று தினேஷ் கூறினார். உயிர்த்தோழி என்று சொல்லிக்கொண்டு கூடவே இருந்து கெடுக்கிற மாதிரி இருக்காங்க, இது என்ன மாதிரி பிரண்ட் என்று எனக்கு தெரியவில்லை ’என்று விசித்ரா கூறினார். ஒரே வார்த்தையில் ‘நாட் கூல்’ என்று அர்ச்சனா கூறினார்.

மொத்தத்தில் இந்த ப்ரோமோவில் கூறிய அனைத்து போட்டியாளர்களுமே மாயாவின் கேப்டன்ஷிப்பை குறை கூறிய நிலையில் யாராவது ஒருவராவது மாயாவின் கேப்டன்ஷிப்பை பாராட்டினார்களா என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.