close
Choose your channels
RaRa

முன்னாள் கணவர் மரண செய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்ட நடிகை!

Sunday, March 28, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் மலையாளம் சீசன் 3 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரின் முன்னாள் கணவர் காலமான செய்தியை கேட்டு அவர் கண்ணீர் விட்ட சம்பவத்தின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள போட்டியாளர்களில் ஒருவர் குணசித்திர நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் பாக்கியலட்சுமி. இவர் சமீபத்தில் கன்பெக்சன் அறைக்கு வரவழைக்கப்பட்ட போது அவருடைய முன்னாள் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி விட்டதை பிக்பாஸ் அறிவித்துள்ளார். இந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சி அடைந்து பாக்கியலட்சுமி கண்ணீர் விட்டார்

இதனையடுத்து கணவரின் இறுதி சடங்கிற்கு செல்லப் போகிறார்களா? என பிக்பாஸ் கேட்டபோது தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதால் இறுதிச்சடங்கில் பங்கேற்பதில் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதனால் தனது மகன்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதனால் அவர்களிடம் போனில் பேச மட்டும் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு பிக்பாஸ் ஒப்புக்கொண்டார்

இதனை அடுத்து அழுதபடியே வெளியே வந்த பாக்கியலட்சுமியிடம் சக போட்டியாளர்கள் என்னவென்று கேட்டபோது தனது முன்னாள் கணவர் இறந்து விட்டதை கூறியதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தனது கணவருக்கு சிறுநீர் கோளாறு இருந்ததாகவும், மாற்று சிறுநீரகம் தான் தருவதாக கூறியும் ஈகோ காரணமாக அவர் மறுத்துவிட்டதாகவும் சக போட்டியாளர்களிடம் அவர் கூறினார்

மேலும் இறுதிச்சடங்கிற்கு சென்றாலும் சங்கடம் என்றும் செல்லாவிட்டாலும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசுவார்கள் என்றும் அதனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் தனது மனக்குமுறலை வெளியிட்டார். அப்போது அவரது சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறி, இறுதி சடங்கிற்கு நீங்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று சமாதானப்படுத்தினார்கள். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz