பூட்டப்பட்ட அறையில் பிரிந்த காதலர்கள்.. வெளியே உறவினர்கள்.. த்ரில் காமெடி படத்தில் பிக்பாஸ் ஆயிஷா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரிந்து போன காதலர்கள் தற்செயலாக ஒரு அறையில் சந்திக்கும் போது, திடீரென அந்த அறையின் கதவு பூட்டப்படுகிறது. அறைக்கு வெளியே இருவரது உறவினர்கள், குடும்பத்தினரும் இருப்பதால், இந்த நிலைமையை இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்ற காமெடி மயமான கதையில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது.
இந்த படத்தில் நாயகியாக பிக் பாஸ் ஆயிஷா நடிக்கிறார். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிஷா, ஏற்கனவே ’சத்யா’ உள்பட சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மேலும், ’உப்பு புளி காரம்’ என்ற தொடரிலும் நடித்த நிலையில், தற்போது அவர் பெரிய திரையில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நாயகனாக ’இரும்புத்திரை’, ’இராவணக்கோட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த கணேஷ் சரவணன் நடிக்கிறார். காதலர்கள் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் பிரிந்து, வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், தற்செயலாக இருவரும் தொடர்பு கொண்டு, சென்னையில் சந்திக்க முடிவு செய்கிறார்கள்.
அவர்கள் சந்தித்த அறையின் கதவு திடீரென பூட்டப்படுகிறது. அறைக்கு வெளியே அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் இருப்பதால், கதவை திறந்தால் என்ன நடக்கும்? அந்த சூழ்நிலையில் அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? என்பதே படத்தின் கதை.
இந்த படத்தை இயக்குனர் ஜாபர் இயக்கி வருகிறார். இப்படத்தில் மறைந்த ரகுவரனின் சகோதரர் ரமேஷ் உள்பட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், ஊடகங்களில் பணிபுரிந்த தனது அனுபவத்தை வைத்து இப்படத்தை உருவாக்குகிறேன் என்றும் இயக்குனர் ஜாபர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com