close
Choose your channels
anabel
friendship

இந்த டீம் கூட சேராதீங்க, மோசமானவங்க: நெட்டிசனின் பதிவுக்கு பதிலடி கொடுத்த அனிதா!

Friday, January 29, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்களாக நடைபெற்றது என்பதும் சமீபத்தில் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் தேர்வு பெற்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து ’பிக்பாஸ் கொண்டாட்டம்’ என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்பதும், இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டனர் என்பதும் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படங்களை போட்டியாளர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த நிலையில் அனிதா தனது சக பெண் போட்டியாளர்களான அர்ச்சனா, சம்யுக்தா, ரேகா, ரம்யா, ஷிவானி மற்றும் நிஷா ஆகியவர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்தார்

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ’இந்த டீம் கூட சேராதீங்க, மோசமானவர்கள்’ என்று பதிவு செய்ய, இதற்கு பதிலடி கொடுத்து உள்ள அனிதா ’எல்லாரும் நல்லவங்க தான் ப்ரோ, கேம் எல்லாம் முடிஞ்சு போச்சு’ என்று பதிலடி கொடுத்துள்ளார். அனிதாவின் இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz