close
Choose your channels
Conjuring Kannappa

'பயங்கரமான மேட்டரா இருக்கே'... கமல்ஹாசனே வியக்கும் அளவுக்கு விக்ரமன் சொன்ன விஷயம்!

Sunday, December 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 56வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஜனனி, மைனா மற்றும் குயின்ஸி ஆகிய 3 வீரர்களுக்கும் 3 பெட்டிகள் மற்றும் 3 சாவிகள் கொடுத்ததை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இரண்டாவது புரமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த புரமோவில், ‘இவர் பாராட்டினால் கண்டிப்பாக பின்னாடி போய் வேறு ஒன்று சொல்வார் என்று சொல்லும் ஒரு நபரை சுட்டிக் காட்டுங்கள் என்று கமல்ஹாசன் கூற தனலட்சுமி ’மைனாவை கூறுகிறார். அதேபோல் ’ஒவ்வொருமுறையும் வேறு வேறு மாதிரி பேசுவார் மைனா’ என்று ஜனனியும் கூறினார்

இதனை அடுத்து எழுந்த மைனா எனக்கு புறம் கூறும் வழக்கம் இருப்பதை நான் ஒத்துக் கொள்கிறேன் என்று கூறினார். இதனையடுத்து அமுதவாணன் அசீமை கூறினார். அதேபோல் ராமும் அசீமை கூறினார்

இதனை அடுத்து விக்ரமன் எழுந்து, ‘மணி உன்னை நான் தான் ஜெயிக்க வைப்பேன், கடைசி வரைக்கும் நான் தான் உன்னை ஜெயிக்க வைப்பேன் என்று அசீம் சொல்லிக்கொண்டே இருப்பார்’ எனக்கூற அப்போது கமல்ஹாசன் ’பயங்கரமான மேட்டரா இருக்கே’ என்று கூறுவதுடன் இன்றைய அடுத்த புரமோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.