close
Choose your channels

இந்த வார தலைவர் பதவிக்கு மல்லு கட்டுவது யார் யார்?  இருவரில் ஒருவர் தான் தலைவர்?

Monday, December 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 77 நாட்கள் முடிவடைந்து இன்று 78வது நாள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்னும் மூன்று வாரங்களே இருப்பதால் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் ஏடிகே, அமுதவாணன், அசீம், கதிரவன், மணிகண்டன், மைனா, ரக்சிதா, ஷிவின் விக்ரமன் ஆகிய 9 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஒருவருக்கொருவர் போட்டி அதிகமாகி உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் மற்றும் தலைவர் பதவிக்கான போட்டி நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று வெளியான முதல் புரமோ வீடியோவில் தலைவர் பதவிக்கான டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் தலைவர் பதவிக்கு முதல் இரண்டு இடத்தை பெற்ற அமுதவாணன் மற்றும் அசீம் ஆகிய இருவரையும் சேர்ந்து கட்டிப்போட்டுள்ள நிலையில் அவர்கள் கீழே பரவியிருக்கும் கிப்டுகளை சேகரித்து அவரவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போட வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு கிப்ட் பொருளை மட்டுமே எடுக்க வேண்டும் அதிக கிப்டுகளை தேர்வுசெய்யும் போட்டியாளர் தலைவர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தலைவர் பதவிக்கான இறுதிப்போட்டியில் அசீம் மற்றும் அமுதவாணன் ஆகிய இருவரும் ஆவேசமாக போட்டியிடும் நிலையில் இருவரில் யார் தலைவர் ஆவார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.